7ஜி ரெய்ன்போ காலணி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, துள்ளுவதோ இளமை போன்ற வெற்றிப்படங்களை கொண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக கொடிக்கட்டி வருபவர் இயக்குனர் செல்வராகவன்.
செல்வராகவன் தன் இயக்கத்தில் தம்பி நடிகர் தனுஷை அறிமுகப்படுத்தி உச்சமடையச்செய்தவர். நானே வருவேன் படத்தின் மூலம் 11 வருடம் கழித்து தனுஷுடன் இணைந்து படத்தினை எடுத்து வெளியிட்டார்.
நானே வருவேன் படம் 29-ஆம் தேதி செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக வெளியானது. படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் பொன்னியின் செல்வன் படத்தினால் வசூலில் அடிவாங்கியது.
இந்நிலையில், மூத்த தயாரிப்பாளராக திகழ்ந்து வரும் கே.ராஜன் முன்னதாக கமல் ஹாசனை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியும் முன்னணி நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
மேலும், தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தினை பல மேடைகளில் பேசி வந்த கே ராஜன், ஒரு நிகழ்ச்சியில் செல்வராகவனை கேவலப்படுத்தி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது:- செல்வராகவன் பல தயாரிப்பாளர் வாழ்க்கையை காலி செய்தவன் என்றும், நல்ல நேரத்தில் எந்த பேரை சொல்ற என்றும் ஆயிரத்தில் ஒருவன் பட தயாரிப்பாளரை காலி செய்தவன் செல்வராகவன் என்று பேசியிருந்தார்.
மேலும் பல குடும்பத்தை பல இயக்குனர்கள் வாழ்க்கையை காலி செய்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.