வரதா இருந்தா வா.. இல்லனா டூப் போட்டு எடுத்துக்கிறேன்.. சரத்குமாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இயக்குனர்..!

Author: Vignesh
1 November 2023, 11:18 am

தமிழ் சினிமாவில் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தையும் ஒரே திரைக்கதையில் அமைத்து மக்கள் ரசிக்கும் படி படங்களை இயக்கி முன்னணியாக இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில்,

சமீபத்தில் சித்ரா லக்ஷ்மணன் அவர்களின் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த கே எஸ் ரவிக்குமார் சரத்குமாரின் அட்டூழியம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், கே எஸ் ரவிக்குமார் இயக்குனரான முதல் படமான புரியாத புதிர் படத்தில் சரத்குமாரை வைத்து இயக்குனாராம்.

sarathkumar-updatenews360

அப்படத்தில் தனக்கும் சரத்குமாருக்கும் பெரிய தகராறு ஆனதாம். மாலை 6 மணிக்கு ஷூட்டிங் இருக்கு நள்ளிரவில் இரண்டு மணிக்கு வந்ததால் எப்படி கோபம் வராமல் இருக்கும். கமல கண்ணனை வைத்து சண்டைக் காட்சி எடுத்திருக்கேன். அவர் வராததால் டூப் ஷாட்டை வைத்து எவ்வளவு நேரம் எடுத்தோம்.

sarathkumar-updatenews360

அதன் பின் ரெண்டு மணிக்கு வந்ததும் அவரை வர்றதா இருந்தால் வரசொல்லு, இல்லனா அவர் மூஞ்சை கூட டூப் போட்டு எடுத்துப்பேன் என கோபத்தில் கத்தினேன். நானும் அவரும் டென்ஷனாக இருந்ததால் அவருக்கும் எனக்கும் அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சண்டைக்கு பின்னர், இருவரும் நட்பாக பழகி ஒன்றாகி விட்டோம் என்று கே எஸ் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ