கட்டாயப்படுத்தி அதை பண்ண வச்சாங்க.. அஜித் படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை..!
Author: Vignesh7 October 2023, 3:00 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.
திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம்.
இந்நிலையில், அஜித்தின் காதல் மன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மானு. அவர் அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி ஒதுங்கி விட்டார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும், தன்னை கட்டாயப்படுத்தி தான் இயக்குனர் நடிக்க வைத்ததாகவும், விவேக் மற்றும் சரண் இருவரும் கட்டாயப்படுத்தி தான் நடிக்க வைத்தனர்.
படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் அதில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கி விட்டேன் என்று மானு தெரிவித்தார். எனது குடும்பம் சினிமா பின்னணி கொண்டதில்லை. எல்லோரும் டாக்டர்கள் தான். என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் Gopinath Bordoloi நான் படிக்கத்தான் சென்னைக்கு வந்தேன். பள்ளியில் படிக்கும்போது கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தனர். அந்த படத்திற்குப் பிறகு முழுவதும் படிப்பில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் தற்போது, டாக்டராக தான் இருக்கிறார் என்று மானு பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது இதனை தெரிவித்தார்.