இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!

Author: Selvan
4 January 2025, 10:08 pm

இசைக்கு உரிய மரியாதையே போச்சு ஜோஸ்வா ஸ்ரீதர் வருத்தம்

தமிழ் சினிமாவில் படத்தின் கதையை மக்கள் எவ்வளவு ரசிக்கிறார்களோ,அந்த அளவிற்கு படத்தில் வரக்கூடிய பாடல்களையும்,பின்னணி இசையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீப காலமாக சில படங்களில் படத்தின் பாடல்கள் அப்போதைக்கு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி அதன் பின்பு இருந்த இடம் தெரியாமலே போய்விடுகிறது.ஆனால் 1980,1990,2000 போன்ற காலகட்டங்களில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் மக்கள் கேட்டு ரசித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.அந்த வகையில் 2004-ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜோஷ்வா ஸ்ரீதர்.

Joshua Sridhar viral interview

காதல் படத்தில் இவர் இசையமைத்த 8 பாடல்களும் செம ஹிட் ஆகி,இன்றும் மக்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.காதல் படத்தின் பின்பு இவர் உயிர்,சென்னை காதல், நினைத்து நினைத்து பார்த்தேன்,கல்லூரி,வெப்பம் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.சில பாடல் எல்லாம் இவர் தான் இசையமைத்தாரா என்று தெரியாமலே மக்கள் அதை இன்றும் கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க: அமரனுக்கு பிறகு தலைக்கனத்தில் ஆடும் சிவகார்த்திகேயன்…பிரபலம் பரபரப்பு பேட்டி..!

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இப்போது வரக்கூடிய பாடல்களின் இசை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.அதில் “நான் இப்போ வரக்கூடிய இசையை நான் கேட்கவும் மாட்டேன்,அது எனக்கு பிடிக்கவும் இல்லை என கூறியுள்ளார்.மேலும் இன்றைக்கு இசையமைப்பவர்களை இசை அமைக்கிறார்கள் என்று கூற மாட்டேன் அவர்களை நான் ஓசை அமைக்கிறார்கள் என்று தான் கூறுவேன்” என வெளிப்படையாக தன்னுடைய மனதில் பட்டத்தை அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

மேலும் அவர் ஆரம்ப காலத்தில் 17 வருடமாக மியூசிக் ஸ்டுடியோவே இல்லாமல் படத்திற்கு இசையமைத்து வந்தேன் என தன்னுடைய கடந்து வந்த பாதைகளையும் கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி அவருடைய பாடல்களை தேடி தேடி கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 50

    0

    0

    Leave a Reply