மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.
இதனிடையே, சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை காஜல் பசுபதி தொடர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் பசுபதி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவு செய்வார். சினிமா துறையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக தைரியமாக பேசுவார் காஜல் பசுபதி.
சாண்டியை விவாகரத்து செய்து 11 வருடம் ஆகியும் இரண்டாம் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்த காஜல் தற்ப்போது திடீரென இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு அதன் புகைப்படங்களை சமூகவலைத்ததில் வெளியிட்டு, ” ஒரு வழியாக தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்தது. சாரி பிரண்ட்ஸ்…. திடீரென முடிவு பண்ணதால் யாரையும் திருமணத்திற்கு கூப்பிட முடியவில்லை” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் ” சும்மா பொய் சொல்லாதீங்க இது சாண்டியுடன் திருமணம் செய்தபோது எடுத்துக்கொண்ட பழைய போட்டோ என்று எங்களுக்கு தெரியும் என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
இந்நிலையில், காஜல் இரண்டாம் திருமணம் பற்றிய செய்திகள் அனைத்திலும் சாண்டியின் புகைப்படமும் இருக்கிறது. அதை குறிப்பிட்டு, மீடியாவை காஜல் பசுபதி விமர்சித்து இருக்கிறார். என்னையா அதுக்குள்ள முடிந்த இரண்டாம் திருமணம்னு போட்டு இருக்கீங்க இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல… “எதுக்குயா எல்லாத்துக்கும் அவன் pic யூஸ் பண்றீங்க. அவனை வாழ விடுங்கயா” என காஜல் குறிப்பிட்டு இருக்கிறார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.