நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.
காஜலை விவாகரத்து செய்த பின்னர் சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சாண்டி, இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. ஆனால் சாண்டியை பிரிந்த பின்னர் நடிகை காஜல் பசுபதி வேறு திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாண்டி – சில்வியா ஜோடிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அதனை பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் காஜல்.
இந்நிலையில் சாண்டி பற்றிய சில உண்மைகளை கூறியுள்ளார் காஜல். சாண்டி தற்போது என்னுடைய நெருங்க நண்பராக இருக்கிறார் என்றும் சாண்டிக்கு பின் இன்னொருவரை காதலித்தேன். ஆனால் திருமணம் வரை சென்றது. பின் அதுவும் ஒரு பிரச்சனையாகி, என் மேல் தப்பு சொல்லியதால் அது செட்டாகாது என்று தனிமையில் வாழ்ந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார். 4 வருடத்திற்கு முன் என்னை எப்போது கைநீட்டினானோ அதிலிருந்து நான் வெளியே வந்துவிட்டேன்.
மேலும் சாண்டியின் மகள் லா லா என்னை மறந்துவிட்டாள். நான் இன்னும் சாண்டியை நினைத்திருக்கிறேன் என்றெல்லாம் நினைக்காதீர்கள். சாண்டி என்னை ஆண்டி என்று மகளிடம் கூறியது கோபப்பட்டேன், அக்கான்னு கூப்பிட சொன்னேன் என தெரிவித்துள்ளார்.
சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் அவரது குழந்தைகளுடன் காஜல் பசுபதி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விவாகரத்து பெற்ற பின்னரும் சாண்டியுடனும், அவரது குடும்பத்தினருடனும் காஜல் பசுபதி நட்புடன் பழகி வருவதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.