நைட் ஃபுல்லா என்னை அடிச்சு சித்ரவதை பண்ணான்.. பிரிவு குறித்து காஜல் பசுபதி பகீர் தகவல்..!

Author: Vignesh
18 July 2024, 12:29 pm

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.

இதனிடையே, சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை காஜல் பசுபதி தொடர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் பசுபதி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவு செய்வார். சினிமா துறையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக தைரியமாக பேசுவார் காஜல் பசுபதி.

சாண்டியை விவாகரத்து செய்து 11 வருடம் ஆகியும் இரண்டாம் திருமணம் செய்யாமல் காஜல் தனியாக வாழ்ந்து வருகிறார். காஜல் பசுபதி தற்போது வெளிப்படையாக தன்னுடைய காதல் குறித்து பேசியுள்ளார். அதில், என்னுடைய வாழ்க்கையில் மூன்று நான்கு காதல் வந்தது அது எல்லாமே சாண்டிக்கு தெரியும். நான் காதலித்தவர்கள் என்னை பிரிந்து போக காரணமே நான் அவர்கள் மீது அதிக பொசசிவாக இருந்ததுதான். சண்டிக்கு பிறகு நான் ஒருவரை காதலித்தேன். அவர் மீது அதிக பொசசிவாக இருக்கக்கூடாது என்று நினைத்து இருவரும் முழு பிரீடமாக இருப்போம் என்று பேசினோம். ஆனாலும், அவர் நீ ஏன் அவங்கள காதலிச்ச மாதிரி என்ன காதலிக்கலை என்று என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். நான்கு வருடங்கள் ஒரு நபரை காதலித்தேன். அவர் என்னுடைய பிறந்தநாள் அன்று மனதில் இருந்த மொத்த கோவத்தையும் கொட்டி என்னை அடித்தார். இரவு முழுக்க என்னை அடித்து விட்டு அந்த நாள் நான் அவரை அடித்தேன் என்று வெளியே போய் சொல்லிவிட்டான் என காஜல் தனது வாழ்க்கை குறித்து தற்போது பேசியுள்ளார்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?