படுக்கையறையில் யாஷிகாவுடன் எஸ்.ஜே.சூர்யா..சிம்பு வெளியிட்ட “கடமையை செய்” டிரெய்லர் வைரல்..!

Author: Rajesh
6 May 2022, 6:07 pm

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கடமையை செய்’. சுந்தரி சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான பணிகளை தீவிரமாக படக்குழு எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் சிம்பு இன்று வெளியிட்டுள்ளார். அதில் யாஷிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் ‘ஸ்கூப்பர்’ என்ற விநோத நோயால் கதாநாயகன் பாதிக்கப்படுகிறார். அப்போது தன்னை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மொத்த கதை. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1975

    4

    1