திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
Author: Selvan10 January 2025, 10:20 pm
நடிகர் சுகுமாரன் மீது புகார்
திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த காதல் பட நடிகர் மீது,காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த காதல் படத்தில் நடித்தவர் சுகுமாரன்,இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வடபழனியில் சேர்ந்த 36 வயது துணை நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரிடடம் இருந்து நகை மற்றும் பணத்தை மோசடி செய்துள்ளார்.
அந்த துணை நடிகையும் ஏற்கனவே கல்யாணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி குழந்தையோடு தனியாக வசித்து வந்த நிலையில்,நடிகர் சுகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த மூன்று வருடமாக இருவரும் காதல் பண்ணியுள்ளனர்.
இதையும் படியுங்க: ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
நாட்கள் போக போக சுகுமாரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள தகவலை அறிந்த துணை நடிகை அதிர்ச்சியாகி,அவர் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.தற்போது போலீசார் நடிகர் சுகுமாரனிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.