டில்லி கார்த்தி மகளை ஞாபகம் இருக்கா.. நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் மோனிகா..!
Author: Vignesh18 November 2023, 11:15 am
சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி அதன் பின் இளம் நடிகைகளுக்கு இணையாக மாறிவரும் குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.
முன்னதாக அனிகா, எஸ்தர் அனில், ரவீனா தாகாவை தொடர்ந்து பிரபலமாகி வருபவர் தான் குட்டி பெண் மோனிகா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான மிகப்பெரும் வெற்றி அடைந்த கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
கைதி படத்தில் அமுதா ரோலில் நடித்து பிரபலமானவர் மோனிகா சிவா. இவர் பல படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமாகி உள்ளார். விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் கட்சியிலும் நடித்துள்ளார். கைது படத்தில் குட்டி பெண்ணாக நடித்த இவர் விக்ரம் படத்தில் சற்று வளர்ந்து காணப்பட்டார். விக்ரம் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆனநிலையில், கைதி 2விலும் மோனிகா நடித்து உள்ளார். தற்போது, மோனிகா வளர்ந்து பெரிய பெண்ணாக மாறி இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம டில்லி பொண்ணா இது என்று வாய்பிளந்தபடி கேட்டு வருகிறார்கள். அதே சமயம், லோகேஷ் மோனிகா வளர்ந்துள்ளதை எப்படி கைது 2வில் காண்பிப்பார் என்ற சந்தேகமும் எழ ஆரம்பித்துள்ளது.