இவ்ளோ தைரியம் எங்க இருந்து வந்துச்சு.. காஜல் அகர்வால் வெளியிட்ட போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!
Author: Rajesh9 April 2023, 1:40 pm
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்ணி நடிகையாக வலம் வரும் இவர், தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையுடன் நேரம் செலவிடுவதையும், தாய்மை குறித்தும் அதிகம் பதிவிட்டு வரும் காஜல், மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

மேலும், தனது உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் தற்போது பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ தாறுமாறு வைரலாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. மலைப்பாம்பை முதுகில் போட்டு இவர் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.