டேய்.. யார்ரா நீ எங்க கைவைக்கிற.. தொடக்கூடாத இடத்தில் கைவைத்த ரசிகர்: கடுப்பான காஜல்..!(வீடியோ)

Author: Vignesh
7 March 2024, 6:00 pm

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

kajal aggarwal - updatenews360

தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க்க அது இணையத்தில் வெளியாகும்.

kajal aggarwal - updatenews360

இந்நிலையில், நேற்று நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜலுடன் செல்பி எடுக்க அதிக ரசிகர்கள் முயற்சி செய்து இருந்தனர். அப்போது, அதில் ஒருவர் எல்லைமீறி அருகில் சென்று காஜல் அகர்வால் இடுப்பில் கை வைத்து இருக்கிறார். அதனால், அதிர்ச்சியாகி காஜல் அகர்வால் ரியாக் செய்ய அந்த நபரை தள்ளி சென்றுவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?