விஜய்யின் இந்த படத்தை தான் என் மகனுக்கு முதலில் காட்டுவேன்.. காஜல் அகர்வால் போட்ட பிளான்..!

Author: Vignesh
7 March 2023, 1:30 pm

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

kajal aggarwal - updatenews360

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.

kajal aggarwal - updatenews360

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள். காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார்.

தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் அவ்வப்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

இதனிடையே, தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொள்ளும் அழகிய புகைப்படங்களை கூட அவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

அப்படி நடிகை காஜல் இந்தியன் 2 படப்பிடிப்பில் தற்போது பிசியாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் குறித்து பேசியுள்ளார்.

kajal-agarwal - updatenews360

அதில், ‘தன் மகனுக்கு 8 வயது ஆகும் வரை எந்த ஒரு படத்தையும் காட்டப்போவதில்லை என்றும், 8 வயது ஆனபின் அவனுக்கு முதன் முதலில் தான் நடித்த துப்பாக்கி படத்தை தான் காட்டுவேன்’ என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் இந்த விஷயத்தை சமுக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 900

    21

    4