இப்படி கூட குளிக்கலாமா?.. வைரலாகும் காஜல் அகர்வாலின் காபி குளியல் வீடியோ..!
Author: Vignesh21 June 2023, 7:30 pm
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.
சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில், காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகுகிறார் என சமீபத்தில் செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த தகவல் உண்மை இல்லை என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
தற்போது இந்தியன் 2 படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனிடையே காஜல் அகர்வால் காபில் குளிக்கும் எடிட்டிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். காபி தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை காட்ட இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோவிற்கு 3 லட்சம் லைக்களுக்கு மேல் ரசிகர்கள் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.