புருஷனா இருந்தாலும் பொதுவெளியில் இப்படி பண்ணலாமா… ஷாப்பிங் மாலில் முகம் சுழிக்க வைத்த பிரபல நடிகை..!
Author: Vignesh26 December 2022, 3:00 pm
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.
சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள். காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார்.
தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறு வைரலானது.
இந்நிலையில், சீனாவின் தைபே பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள காஜல், அங்கு தனது குடும்பத்தினரும் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு தனது மகன் நீல் கிட்ச்லுவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதில் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்ச்லுவின் கையில் மகன் நீல் கிட்ச்லு இருக்கிறார். அப்போது கெளதமை கட்டிப் பிடித்து லிப் லாக் கிஸ் கொடுக்கிறார் காஜல் அகர்வால்.
ஷாப்பிங் மால் ஒன்றில் தனது மகனை நடக்க வைக்க முயற்சிக்கும் காஜல், நீல் கிட்ச்லுவின் ஒவ்வொரு அடியும் மேஜிக் என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இன்னொரு போஸ்ட்டில் எங்கள் இதயங்களை பறக்கவிடுகிறோம் என்ற கேப்ஷனுடன் தனது மகனை மேலே தூக்கிப் போட்டு பிடிக்கிறார் காஜல். இதனையடுத்து அவர் ஷேர் செய்த போஸ்ட் தான் வைரலாகி வருகிறது.