வாவ்…. காஜல் அகர்வால் மகனா இது? குல்ஃபி மாதிரி இம்புட்டு அழகா வளர்ந்திட்டாரே!

Author: Shree
30 October 2023, 5:53 pm

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க்க அது இணையத்தில் வெளியாகும். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் மகனுடன் இருக்கும் ஒரு அழகை புகைப்படம் சமூகவலைத்தளங்கள் முழுக்க வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் நெட்டிசன்ஸ் அட நம்ம காஜல் மகனா இது இம்புட்டு வளர்ந்திட்டு இருக்காரே என வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!