நயன்தாரா Style’லில் புதிய பிசினஸ் துவங்கிய காஜல் – லிப்கிஸ் கொடுத்து வாழ்த்திய கணவர்!

Author: Shree
14 May 2023, 8:41 am

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் தொடர்ந்து திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும் காஜல் அகர்வால் தற்போது ” காஜல் by காஜல்” என்ற புதிய அழகு சாதன பொருட்கள் கம்பெனி ஒன்றை துவங்கியுள்ளார்.

கண் மை விற்பனையகத்தை மையமாக கொண்டு இந்த தொழில் துவங்கியுள்ளார். இந்த திறப்பு விழாவுக்கு தனது கணவர் கெளதம் கிச்சுலுவை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.அப்போது காஜலுக்கு லிப்கிஸ் கொடுத்து கணவர் வாழ்த்தியுள்ளார். இதே போன்று தான் நடிகை நயன்தாராவும் Lipbalm கம்பெனி துவங்கி பிசினஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?