திடீரென இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட காஜல் பசுபதி – புகைப்படம் வெளியிட்டு ஷாக்!

Author: Rajesh
26 December 2023, 5:39 pm

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.

இதனிடையே, சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை காஜல் பசுபதி தொடர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் பசுபதி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவு செய்வார். சினிமா துறையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக தைரியமாக பேசுவார் காஜல் பசுபதி.

சாண்டியை விவாகரத்து செய்து 11 வருடம் ஆகியும் இரண்டாம் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்த காஜல் தற்ப்போது திடீரென இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு அதன் புகைப்படங்களை சமூகவலைத்ததில் வெளியிட்டு, ” ஒரு வழியாக தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்தது. சாரி பிரண்ட்ஸ்…. திடீரென முடிவு பண்ணதால் யாரையும் திருமணத்திற்கு கூப்பிட முடியவில்லை” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் ” சும்மா பொய் சொல்லாதீங்க இது சாண்டியுடன் திருமணம் செய்தபோது எடுத்துக்கொண்ட பழைய போட்டோ என்று எங்களுக்கு தெரியும் என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 649

    0

    0