கஜோல் அணிந்த இந்த சேலையின் விலை இத்தனை லட்சமா? இவ்வளவு விலைக்கு காரணமே இதுதானாம்..!

Author: Vignesh
23 December 2023, 9:59 am

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

kajol

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில், கஜோல் 18 கிலோ வரை உடல் எடை குறைத்து சிக்கென மாறி இளம் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுத்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட டயட் பிளான் பலரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.

kajol updatenews360

இந்நிலையில், நேற்று தயாரிப்பாளர் ஆனந்த் பண்டித்தின் 60வது பிறந்தநாள் பார்ட்டி நடந்த நிலையில், அதில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் பங்கேற்றனர். நடிகை கஜோல் ஜொலிக்கும் சேலையில் அழகாக அந்த பார்ட்டிக்கு வந்து இருந்தார். பலரது கவனத்தையும் ஈர்த்த அந்த சேலையின் விலை தான் பலருக்கும் ஷாக் கொடுத்து உள்ளது. Irth என்ற பிராண்டின் அந்த புடவை விலை 1,40,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?