இறப்பதற்கு முன்பு 12 பீர்…. கலாபவன் மணி மரணம் திட்டமிட்டதா…? 6 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான திடுக்கிடும் தகவல்..!!

Author: Babu Lakshmanan
13 November 2023, 9:55 pm

நடிகர் கலாபவன் மணியினி உயிரிழப்பு குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழிலும் மிகவும் பிரபலமான நடிகராவார். தனிப்பட்ட திறமைகளால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின. மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், நடிகர் கலாபவன் மணியின் இறப்பு குறித்து விசாரிக்க சிபிஐக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு, தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கு காரணம் என்று கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது :- கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்த போதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை. மரணத்தை கலாபவன் மணியே தேடிக்கொண்டார்.

அவர் இறப்பதற்கு முன்பு 12 பாட்டீல் பீர் குடித்துள்ளார், என்று திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அவரது ரசிர்களுக்கு மட்டுமின்றி கேரள, தமிழக திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!