சம்பளமே வேண்டாம் சொன்ன நடிகை; இயக்குனருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

Author: Sudha
3 July 2024, 11:39 am
Quick Share

தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

இவர் தன்னுடைய தன் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

1990 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் அமலாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் புதுப்பாடகன்.

இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மாணிக்கம் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். புதுப்பாடகன் திரைப்படம் 1990 இல் வெளிவந்து பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது.படம் வெளிவந்து 34 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் திரைப்படம் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குனரான கலைப்புலி எஸ் தாணு.

அமலா அவர்களை நாயகியாக கேட்ட பொழுது அவருக்கு சம்பளமாக நான்கு லட்சம் ரூபாய் பேசப்பட்டதாம்.அவருக்கு அட்வான்ஸ் ஆக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் பட்டிருக்கிறது.

படம் நடிக்கும்போது தாணு அவர்களின் இயக்கத்தை கூர்ந்து கவனித்த அமலா இவ்வளவு டெடிகேட்டட் இயக்குனரா என்று வியந்து தன் சம்பளமான மீதி இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளவே இல்லை என தாணு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Views: - 58

0

0

Leave a Reply