சுந்தர்.சி-யின் கலக்கல் சம்பவம்..கலகலப்பு 3-யில் முக்கிய நடிகர்கள்…குஷியான ரசிகர்கள்..!
Author: Selvan5 December 2024, 9:52 pm
கலகலப்பு 3 நடிகர்கள் அறிவிப்பு
சுந்தர் சி தமிழ் சினிமாவில் தனது பிரமாண்டமான நகைச்சுவை திரைப்படங்களால் தனிப்பட்ட அடையாளம் பெற்றவர்.அவர் இயக்கிய கலகலப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பின் வந்த கலகலப்பு 2 முதல் பாகத்தை போல் வெற்றி அடையவில்லை. இதையடுத்து, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த கலகலப்பு 3 குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ,அவரது அவ்னி சினிமாஸ் நிறுவனம் மற்றும் தொழிலதிபர் கண்ணன் ரவி இணைந்து கலகலப்பு 3 படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.
தற்போது இந்தத் திரைப்படத்தின் முக்கிய நட்சத்திரங்களாக மிர்ச்சி சிவா, விமல், மற்றும் வாணி போஜன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், மற்ற கதாபாத்திரங்களை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: அடேங்கப்பா..பல கோடிக்கு விலை போன புஷ்பா 2 …OTT ரிலீஸ் எப்போன்னு தெரியுமா..!
இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைய உள்ள கண்ணன் ரவி துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். ஏற்கனவே, இராவணக் கோட்டம் மற்றும் சிம்புவின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.
முதல் இரண்டு பாகங்களை விட கலகலப்பு 3 அதிகமான நகைச்சுவை மற்றும் புதுமையான கதைக்களத்துடன் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுந்தர் சி-யின் காமெடி ஸ்டைல் மற்றும் புதிய நடிகர்களின் சேர்க்கை மூலம் இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவை பெற வாய்ப்பு உள்ளது.