Adjustment செய்தால் வாய்ப்பு கன்ஃபார்ம்.. அறந்தாங்கி நிஷா இப்படித்தான் பிரபலம்.. சர்ச்சையை கிளப்பிய KPY பிரபலம்..!

Author: Vignesh
2 September 2023, 5:43 pm

சீரியலுக்கு மாற்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் பிரபலம் அடைந்து வந்தன. அந்த சமயத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல போட்டியாளர்கள் பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட சசிகலா அந்த நிகழ்ச்சி குறித்தும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறித்தும் பரபரப்பாக பல குற்றச்சாட்டுகளை வைத்து தற்போது பிரபலமடைந்து வருகிறார்.

sasikala kpy - updatenews360

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்த சசிகலா, அறந்தாங்கி நிஷா, பழனி, நவீன் போன்றவர்கள் கலந்து கொண்ட சீசனில் தான் பங்கேற்றார். ஆனால், சசிகலாவின் பெர்ஃபார்மன்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையிலும் நிகழ்ச்சியிலிருந்து திடீரென நீக்கப்பட்ட அதற்கான காரணத்தை பற்றி தற்போது பேட்டியில் சசிகலா பேசி வருகிறார்.

aranthangi nisha - updatenews360

அதாவது பழனியும் சசிகலாவும் புது புது ஜோக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோது அறந்தாங்கி நிஷா மட்டும் பழைய ஜோக்குகளை சொல்லி ரசிகர்களை கவர்ந்தார் என்றும், அதுபோல நடுவர்களிடமும் அறந்தாங்கி நிஷா சரிசமமாக நிற்பார். ஆனால் நான் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள்.

aranthangi nisha - updatenews360

பழைய ஜோக்குகளை இப்போதைக்கு ஏற்றவாறு அறந்தாங்கி நிஷா சொல்லி சொல்லியே மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்று தெரிவித்திருந்தார். இருந்தாலும், விஜய் டிவியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற காரணத்தை இப்போது வரை நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் உண்மையான காரணம் குறித்து இன்னும் எனக்கு தெரியவில்லை.

sasikala kpy - updatenews360

அதுபோல நான் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் இப்போதும் இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் சில சமயங்களில் இவர் நடுவராகவும் பட்டிமன்றத்தை நடத்தி இருக்கிறார். இந்த நிலையில், சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் இவர் நடிக்கவும் செய்திருக்கிறார்.

sasikala kpy - updatenews360

ஆனாலும், கூடவே அட்ஜஸ்மென்ட் கேட்டு சிலர் தொந்தரவு செய்து வருவதாகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கன்ஃபார்ம் என்று அவர்கள் கூறுவதாகவும், அதற்கு தான் உன் கூட படுத்து தான் நான் வாய்ப்பு வாங்கணும் என்று எனக்கு தேவையில்லை. உன்கூட படுக்குறதுக்கு நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்தை ஓட்டுவேன் என்று இவர் அதட்டியும் தட்டி கழித்தும் விட்டாராம். அது போலவே, ஆரம்ப காலங்களில் கணவனால் பல கொடுமைகளுக்கு ஆளான சசிகலா இப்போது, டிவி நிகழ்ச்சி பட்டிமன்றம் என்று தற்போது, பிஸியாக தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டும் குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்து வருவதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 692

    0

    1