கொட்டோ கொட்டுனு கொட்டிய பண மழை… ரஜினி கேட்ட காரையே பரிசா கொடுத்த கலாநிதி மாறன்!
Author: Shree1 September 2023, 3:56 pm
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஃபுல் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். படம் இதுவரை சுமார் 525 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டி சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. 240 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் டபுள் மடங்கு வசூல் ஈட்டியால் படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார்.
இதனால் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு சிறப்பான பரிசு சலுகைகள் வழங்கி வரும் கலாநிதி மாறன் தற்போது ரஜினிக்கு இதில் BMW X7 மாடல் காரை பரிசாக கொடுத்து நன்றி கூறியுள்ளார். முன்னதாக BMW i7 மற்றும் BMW X7 மாடல் காரில் ஒன்றை தேர்வு செய்யச்சொல்லி ரஜினியிடம் கேட்டாராம். அதற்கு ரஜினி BMW X7 கார் வேண்டும் என கேட்க அவர் கேட்டதையே பரிசாக கொடுத்துவிட்டாராம். அதன் விலை ரூ.1.26 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது எல்லாமே நடிகர் கமல் ஹாசனை பார்த்து காப்பியடிக்கிறார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்குமுன் எந்த தயாரிப்பு நிறுவனமும் படம் ஹிட் ஆனால் கூட இதுபோன்று வெளிப்படையாக பரிசுகளை கொடுக்காது. மறைமுகமாக லாபத்தை எடுத்துக்கொண்டு படம் ஓகே சுமாரான வெற்றி என கூறிடுவார்கள். ஆனால், கமல் ஹாசன் தான் தயாரித்து நடித்த விக்ரம் படத்தின் லாபத்தை படக்குழுவினருக்கு பரிசுகளாக கொடுத்து இன்பத்தில் ஆழ்த்தினார். அதையே பார்த்து காப்பியடித்து விட்டார்கள் சன்பிச்சர்ஸ்.
#JailerSuccessCelebrations continue! Superstar @rajinikanth was shown various car models and Mr.Kalanithi Maran presented the key to a brand new BMW X7 which Superstar chose. pic.twitter.com/tI5BvqlRor
— Sun Pictures (@sunpictures) September 1, 2023