ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் தங்கம், வெள்ளி…. தொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கலாநிதி மாறன்!

Author: Shree
15 September 2023, 6:29 pm

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஃபுல் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

ஜெயிலர் படம் இதுவரை சுமார் 650 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டி சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. 240 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் பல மடங்கு லாபம் ஈட்டியதால் படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார். இதனால் ரஜினி , நெல்சன் , அனிருத் உள்ளிட்டோருக்கு சொகுசு கார் பரிசளித்த கலாநிதி மாறன். தற்போது சன் பிச்சர்ஸ் குழுமத்தின் ஊழியர்கள் அனைவர்க்கும் அறுசுவை விருந்து கொடுத்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக கொடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!