கார் கொடுத்து கணக்கு முடிக்க விரும்பல… கை நீட்டு நெல்சா – நினைத்துக்கூட பார்க்க முடியாத பரிசு கொடுத்த கலாநிதி மாறன்!

Author: Shree
30 August 2023, 7:22 pm

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு முன்னர் நெல்சன் கோலமாவு கோகிலா, பீஸ்ட் , டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் வைத்து படம் எடுப்பதால் எல்லோரது பார்வையும் நெல்சன் மீதே இருந்தது.

இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். பான் இந்தியா படமாக வெளியாகி இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.

இதனால் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளான கலாநிதி மாறன் நெல்சனுக்கு பல கோடி மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளிக்க திட்டமிட்டு 8 கார்களின் பெயரை சொல்லி இதில் எது வேண்டும் என கேட்டாராம். இதை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற நெல்சன்…. இருங்க சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சொல்றேன் என கூறிவிட்டு அந்த 8 கார்களையும் டெஸ்ட் ட்ரைவ் செய்தாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள்… யப்பா யாரு சாமி நீ? பரிசு கூட பார்த்து வாங்குறியேப்பா…! அது சரி சூப்பர் ஸ்டார் கிட்டயே நல்ல காஃபி இருந்தா. கொடுங்கன்னு கேட்டவன் தானே நீ? என கூறி கலாய்த்தனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நெல்சனுக்கு கார் கொடுத்தால் பத்தாது. அதைவிட வாழ்நாள் நினைவாக சிறப்பான பரிசு கொடுக்கவேண்டும் என எண்ணி உங்களுடைய அடுத்த படத்தையும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியிடலாம். அதற்காக நீங்கள் ஜெயிலர் படத்தில் வாங்கிய சம்பளத்தை விட டபுள் மடங்கு சம்பளம் கொடுக்கிறோம் என உறுதி அளித்தாராம். இந்த தகவல் நெல்சனுக்கு நெருக்கமானவர்கள் கோலிவுட்டில் பரப்பிவிட்டு பெருமையாக பேசி வருகிறார்கள்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!