5 ஆண்டுகளுக்கு பிறகு; மீண்டும் காளிதாஸ்; தொடங்கிய படப்பிடிப்பு; வந்து நின்ற சிவகார்த்திகேயன்,..
Author: Sudha12 July 2024, 2:24 pm
காளிதாஸ் திரைப்படம் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கிய 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் .இப்படத்தில் பரத் கதாநாயகனாக நடித்தார்.சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது,பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

பரத்தின் கேரியரில் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது.
காளிதாஸ் இரண்டாம் பாகத்தில் பரத்துடன் அஜய் கார்த்திக் நடிக்க இருக்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. சிவகார்த்திகேயன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.