குடும்பத்துடன் ஹனிமூன்..குதூகலத்தில் பிரபல ஜோடி..வைரலாகும் புகைப்படம்..!

Author: Selvan
18 December 2024, 4:47 pm

காளிதாஸ் ஜெயராமின் ஹனிமூன் புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் ஜெயராம்.இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்.இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இவருடைய மகனான காளிதாஸ் ஜெயராம் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.அதுவும் குறிப்பாக இவர் பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Kalidas Jayaram honeymoon Finland

இவருடைய நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இப்படத்தில் தனுசுக்கு கடைசி தம்பியாக நடித்திருப்பார்.

இதையும் படியுங்க: தாறுமாறாக சம்பளம் கேட்கும் அனிருத்…அதிர்ச்சியில் ஜெயிலர் 2 படக்குழு…!

இவர் மாடலிங் துறையை சேர்ந்த தாரிணி என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலை பெற்றோரிடம் சொல்லி,கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.சில தினங்களுக்கு முன், இவர்கள் திருமணம் கேரளா குருவாயூரில் உள்ள கோவிலில் மிக எளிமையாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், திருமணம் முடிந்து கையோடு காளிதாஸ் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் ஃபின்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.

அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!