காளிதாஸ் ஜெயராமின் திருமணம்
மலையாள நடிகரான ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராமுக்கும் அவரது நீண்ட நாள் காதலியுமான ஊத்துக்குளி ஜமீன் வாரிசு தாரிணிக்கும் இன்று திருமணம் நடைப்பெற்றது.
இவர்களது திருமணம் கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பாரம்பரிய முறைப்படி நடந்தது.
இந்த திருமணத்தில் நடிகர் சுரேஷ் கோபி தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.இது தவிர கேரள பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும்,கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தனர்.
இதையும் படியுங்க: பியானோவில் தனுஷ் செய்த மேஜிக் : யார நினைச்சு இப்படி வாசிக்குறாரு…இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
காளிதாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
കാളിദാസ് ജയറാമിന്റെ വിവാഹം ഗുരുവായൂർ അമ്പലത്തിൽ🥰 തരിണിയെ താലികെട്ടി സ്വന്തമാക്കി❤️ #kalidasjayaram pic.twitter.com/8MCBaRHPnQ
— IndianCinemaGallery (@cinemagallery) December 8, 2024
அதேபோல் மணமகள் தாரிணி, 2021ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடம்பிடித்தவர் மற்றும் ஊத்துக்குளி ஜமீன் வாரிசை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜெயராமின் நெகிழ்ச்சி உரை
முன்னதாக சென்னையை அடுத்த மதுரவாயலில் நடந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ஜெயராமும் அவரது மனைவியும் தங்களது மருமகள் தாரிணியை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர்.
அப்போது மேடையில் பேசிய நடிகர் ஜெயராமன் எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் மனமார வரவேற்கிறோம்.
இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது தந்தை எங்களுக்காக இன்னிசைக்கச்சேரி நடத்தியதுக்கு ரொம்ப நன்றி.என் வாழ்வில் மிக சந்தோஷமான நாள் இது என்று சொல்லலாம்.
காளியோட கல்யாணம் என்பது எங்களுக்கு எல்லாம் ஒரு கனவு,அந்த கனவு இப்போ அற்புதமாக முடிந்துள்ளது.தாரிணியை மருமகள்னு சொல்லமாட்டேன்,என்னுடைய மகள்.
எல்லோரும் எங்கள் பிள்ளைகளை வாழ்த்திட்டுப்போகணும் என நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் ஜெயராம்.