நீ கக்கூஸ் கூட கழுவு… ஆனால்…. துவண்டுப்போன நேரத்தில் கமலுக்கு அம்மா சொன்ன ஆறுதல் – Emotional வீடியோ!
Author: Shree1 June 2023, 5:59 pm
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
1960களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் செல்வம் என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். தொடர்ந்து பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பிறகு ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திறமை, நடிப்பு உள்ளிட்டவை உலக நாயகனாக மாற்றியது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனது அம்மாவை குறித்து ஒரு சில வார்த்தைகளை பேசியுள்ளார். அதாவது, நான் வாழ்க்கையில் துவண்டுபோயிருந்த சமயத்தில், நான் இப்படியே விளங்காதவனாக போய்விடுவேனா அம்மா? என வருத்தத்தோடு கேட்டேன்.
அதற்கு என் அம்மா, நீ என்ன வேலை செய்தாலும் கவலை இல்லை. நீ கக்கூஸ் கூட கழுவு… இந்தியாவிலே என் மகன் தான் சிறந்த கக்கூஸ் கழுவுபவனாக இருக்கவேண்டும் என எனக்கு சிறந்த அட்வைஸ் கொடுத்தாங்க. அந்த மாதிரி நான் தனித்துவமான திறமைசாலியாக இருக்கவேண்டும் என என் அம்மா ஆசைபட்டதாக கமல் கூறியுள்ளார். இதோ அந்த எமோஷனல் வீடியோ: