கமலுடன் ‘அந்த’ படத்துல நடிக்க வாய்ப்பு கிடச்சுது.. மிஸ் பண்ணிட்டே : புலம்பும் 80களின் பாப்புலர் நடிகை!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 3:16 pm

பொதுவாக சினிமாவின் முன்னணி நடிகர்கள் உடன் நடிக்க ஒவ்வொரு நடிகையும் தவமாய் தவமிருப்பர். அப்படி சான்ஸ் கிடைச்சும் நடிக்க முடியாம போச்சே என புலம்பும் நடிகைகளும் உண்டு.

அப்படித்தான் 80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா.

இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து தற்போது வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அனைத்து நடிகர்களுடன் நடித்த நதியா இன்னும் கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த நதியா, ரஜினி, கமல் எல்லாம் LEGENDS, அவங்க கூட நடிக்கும் போது நிறைய கத்துக்கலாம். கமல் கூட பழைய விக்ரம் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைச்சுது என்னால பண்ண முடியல.

கண்டிப்பா எதிர்காலத்துல சான்ஸ் கிடைச்சா அவரு கூட நடிப்பேன், விக்ரம் படம் பார்த்தேன், ரொம்ப அழகா இருந்தாரு. அவரு கூட நடிக்க முடியலயேனு இப்ப FEEL பண்ற என கூறினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 550

    5

    1