ஓ இவங்க தான் அந்த ஜானகியா.. கமல் பட ஹீரோயின்களின் பெயர் ரகசியம் இதுதானா..!

Author: Vignesh
20 September 2023, 1:20 pm

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.

ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் கமல், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளும் கமல் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவது வழக்கமாக உள்ளது.

இதனிடையே, 70 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல திரைப்படங்களை கொடுத்தவர் கமல். ஒவ்வொரு படத்திலும் பல தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருப்பார்.

KAMAL HASSAN

முன்னதாக, சினிமா பிரபலங்களின் வெற்றிக்கு பின்னர் யாராவது ஒருவர் இருப்பார்கள். அப்படி சில பிரபலங்களுக்கு ஜாதகம் மற்றும் நியுமராலஜி போன்ற சில செண்டிமெண்ட்கள் இருக்கும். அந்தவகையில், படங்களில் நடிகைகளின் பெயரில் சில செண்டிமெண்ட்டை கமல் வைத்து இருக்கிறார். கமல் படங்களுக்கு பெரும்பாலும், கிரேஷி மோகன் தான் கதை ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.

kamal - updatenews360 3

அப்படி, கமல் படங்களான தெனாலி, பம்மல் K சம்மந்தம், வசூல் ராஜா MBBS, அவ்வை சண்முகி போன்ற படங்களில் கதாநாயகிகளின் பெயர் ஜானகி என்று தான் இருக்கும்.
இதற்கு என்ன காரணம் என்ற ரகசியம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, கிரேஷி மோகனின் வளர்ச்சிக்கு அவரது ஆசிரியர் முக்கிய காரணம் என்பதால் அவர் பெயர் ஜானகி என்பதால் தான் கமல் படங்களில் ஜானகி என்று பெயரை வைத்திருக்கிறாராம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 381

    0

    0