ரகுவரன் ஏன் கமல் படத்தில் கடைசி வரை நடிக்கவில்லை? – மவுனம் கலைத்த ரகுவரன் மனைவி ரோகினி..!

நிறைய சந்தோஷமான தருணங்களை ரகுவரன் மிஸ் செய்து விட்டார் என்று நடிகையும், ரகுவரனின் முன்னாள் மனைவியுமான ரோகினி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபமாலான வில்லனாக இருந்தவர் ரகுவரன். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்தியது. அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார்.

ரகுவரன் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழில் உள்ள ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தவர். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

ரகுவரன் மறைவு:

பிரிவிற்கு பின் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் ரகுவரனின் முன்னாள் மனைவி ரோகினி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் ரகுவரன் குறித்து கூறி இருந்தது, எங்களுடைய மகன் ரிஷி மற்றும் ரகுவரனை சேர்த்து நான் அதிகம் போட்டோ எடுத்து இருக்கிறேன்.

ரோகினி அளித்த பேட்டி:

நானும் ரகுவரனும் ரிசியை அதிக முறை போட்டோ எடுப்போம். இந்த தருணங்கள் எல்லாம் மறக்க முடியாது. இப்போது தான் இந்த சோசியல் மீடியா உடைய பயன்பாடு அதிகம் இருக்கிறது. இந்த நேரத்தில் ரகுவரன் உடைய சின்ன சின்ன அசைவுகள், டயலாக் டெலிவரி, நடிப்பை சினிமா ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதை அவர் தெரிந்திருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்.

ரகுவரன் குறித்து சொன்னது:

இந்த தருணங்களை அவர் மிஸ் செய்து விட்டார். ஒரே ஒரு சாவித்திரி, ஒரே ஒரு எஸ்.வி. ரங்கா ராவ், ஒரேயொரு சந்திரபாபு. அதே போன்று ஒரே ஒரு ரகுவரன் என நான் அடிக்கடி அவரிடம் சொல்வேன். அவருக்கு இந்த தைரியம் போதுமானதாக இல்லை. அவருக்கு இன்னும் எல்லோரும் தைரியம் கொடுக்க வேண்டி இருந்தது என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.

விவாகரத்து

சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 8 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் தங்களது விவாகரத்து குறித்து ரோஹிணி சமீபத்தில் மனம் திறந்துள்ளார் அதில்..அனைவரையும் போல தங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்களுக்குள் எழுந்த பிரச்சனை மகனை பதித்த காரணத்தால் தான் இருவரும் இந்த முடிவினை எடுக்க வேண்டியதாகி விட்டது என கூறியுள்ளார்.

மேலும் ரோகினி அளித்த பேட்டியில் ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்த ரகுவரன் ஏன் கமலஹாசன் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று ரோஹினியுடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரகுவரனின் மனைவி ரோகினி கமலஹாசன் நடித்திருந்த “நாயகன்” திரைப்படத்தில் நடிகர் நாசர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ரகுவரன் தான், ஆனால் அப்போது ரகுவரன் வேறொரு திரைப்படத்தில் நடிப்பதற்காக நீளமான முடி வைத்திருந்த காரணத்தால், அந்த படத்தில் நாசர் நடித்தாராம்.

ஆனால் கமல் மற்றும் ரகுவரன் இருவருமே மிகப்பெரிய நடிகர்களாக இருந்த காரணத்தால், கமலுடன் ரகுவரன் நடித்தால் காமலுடைய நடிப்புக்கு மதிப்பு குறைந்து விடும் என்று தான் ரகுவரன் நடிக்க கமல் சம்மதிக்க வில்லை என்று அப்போது பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் அந்த மாதிரியான விஷியங்கள் நடைபெற வில்லை.

கமலஹாசனும் கூட நடிகர் ரகுவரன் நடிக்காதது தனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறியிருந்தார் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

கமலஹாசன் திரைவாழ்க்கையில் நாயகன் திரைப்படம் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. 1 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட நாயகன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து பல விருதுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

3 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

4 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

5 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

5 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

5 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

6 hours ago

This website uses cookies.