அவளிடம் அப்படி என்ன இருக்கு? காதலித்து ஏமாற்றிய கமல்? சட்டை பிடித்து கேட்ட ஸ்ரீ வித்யா!

Author:
29 July 2024, 5:28 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளுள் ஒருவராக ஒரு காலத்தில் இருந்து வந்தவர்தான் ஸ்ரீவித்யா. கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 70க்களில் நடிக்க ஆரம்பத்த இவர் 2000ம் கால கட்டம் வரை தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்.

இதனிடையே அவர் முதுகெலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோயின் தாக்கம் அதிகமானதால் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி மரணமடைந்தார். நடிகை ஸ்ரீவித்யா மலையாளம் , தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதுவரை 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். சிறந்த நடிகை ,சிறந்த டான்ஸர் , சிறந்த பாடகி என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி காட்டியுள்ளார்.

திரைப்படத்துறையில் நடிகையாக வளர்ந்து வந்த சமயத்தில் ஸ்ரீவித்யா நடிகர் கமல்ஹாசனை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். கமல்ஹாசனுக்கு ஜோடியாக “அபூர்வராகங்கள்” படத்தில் நடித்த போது தன்னைவிட வயதில் சிறியவரான கமல்ஹாசனை காதலிக்க துவங்கிய ஸ்ரீவித்யா இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் பின்னர் இவர்களது காதல் நிறைவேறாமல் முறிந்து போனது.

அதற்கு முக்கிய காரணமே ஸ்ரீவித்யாவின் அம்மா தான். இது குறித்து பேட்டியில் கூறிய ஸ்ரீ வித்யா, “நானும் கமல் ஹாசனும் காதலித்து வந்தோம். அது ஒன்றும் அவ்வளவு பெரிய ரகசியமெல்லாம் கிடையாது.

திரைத்துறையில் எல்லோருக்குமே இந்த விஷயம் தெரியும். கமலுடைய தந்தையாருக்கு என் மீது அதிக அன்பு இருந்தது. நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரும் விரும்பி இருந்தார். ஆனால் என்னுடைய அம்மா தான் சில வருடங்கள் காத்திருக்கும் படி கூறினார்.

மேலும் கமலஹாசனை சந்தித்து இது குறித்து பேசிய என்னுடைய அம்மா, இப்போது. ஸ்ரீவித்யாவுக்கு 21 வயது தான் ஆகிறது. கமல் மகா நடிகனாக வேண்டும். அதேபோல் ஸ்ரீவித்யாவும் சினிமா துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொட வேண்டும்.

நீங்கள் இருவருமே சினிமா துறையில் போக வேண்டிய உயரமும் தூரமும் அதிகம் இருக்கிறது. அப்படி நீங்கள் பெரிய நட்சத்திரங்கள் ஆனது பிறகும் உங்களுக்குள் காதல் உண்மையாகவே இருந்தால் நீங்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளலாம் என கமல்ஹாசனிடம் ஸ்ரீதிவ்யாவின் அம்மா கூறியிருக்கிறார்.

அம்மாவின் பேச்சை தட்டாத ஸ்ரீவித்யாவும் கமலிடம் அப்படியே கூற கமல் மிகவும் கோபமாகி ஸ்ரீவித்யாவை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதை அடுத்து கமல்ஹாசன் வாணி கணபதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஸ்ரீவித்யா மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி பல நாட்கள் அதை எண்ணி எண்ணி அழுது தூங்காமல் இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் நான் அந்த பெண்ணை விட அப்படி எந்த விதத்தில் குறைந்தேன்?

அந்த பெண்ணிடம் அப்படி என்ன இருக்கிறது? என்றெல்லாம் நினைத்து வருத்தப்பட்டாராம். அந்த சமயத்தில் தான் எதையுமே யோசிக்காமல் நான் உன்னை விரும்புகிறேன் என ஸ்ரீவித்யாவிடம் கூறிய மலையாள தயாரிப்பாளரான ஜார்ஜ் என்பவரை எந்த யோசனையும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணமும் தோல்வி அடைந்து விட்டது. திருமண வாழ்க்கையிலும் கணவரால் ஏமாற்றப்பட்ட ஸ்ரீவித்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். அதன் பின் அவர் புற்றுநோயால் தாக்கப்பட்டு. சிகிச்சை பலன் இன்றி 2006 ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 135

    0

    0