என் Bed Room’யை ஏன்டா எட்டி பாக்குறீங்க? பிரபல நடிகையுடன் உல்லாச உறவை நியாயப்படுத்திய கமல்!
Author: Shree31 May 2023, 3:12 pm
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் இவர் நடிகை சிம்ரன் உடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். சிம்ரன் – கமல் இருவரும் சேர்ந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்தனர். அந்த சமயத்தில் கமல் சிம்ரன் உடன் நெருக்கமாக பழகி வந்ததோடு இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாக அன்றைய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டது.
அது மட்டும் அல்லாமல் சிம்ரன் தான் சம்பாதித்த பணம் அத்தனையும் கமலிடம் கொடுத்தே அழித்ததாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும், கமல் சிம்ரன் குறித்து கிசுகிசுக்கள் வெளியானதால் கடுப்பாகி, என் வீட்டு ஜன்னலை ஏன்டா எட்டி பாக்குறீங்க? என கேட்டு கொந்தளித்ததோடு நடிகை சிம்ரன் உடன் ரகசிய உறவில் இருந்ததை நியாயப்படுத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவம் தற்போது கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது.