ஆண்டவரே அப்படி சொல்லிட்டார்..! உடை சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கமல் காஸ்ட்யூம் டிசைனர்..!

Author: Vignesh
24 January 2023, 6:00 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 நிறைவடைந்ததில் அசிம் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை விக்ரமனும் பிடித்திருந்தனர்.

இந்தநிலையில், இறுதிப் போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளத்தில் பெரும் கேள்விக்கு உள்ளாகி இருந்தது. பிக் பாஸ் சீசன் 4-ல் நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை உடுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வப்போது போட்டியாளர்களிடன் கூட இது கதறினாள் செய்யப்பட்ட ஆடை என்று சுட்டிக்காட்டி கொண்டே இருப்பார்.

kamal - updatenews360

இப்படி ஒரு நிலையில் முன்னதாக நடிகர் கமல் ‘House Of Khaddar’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து போட்டியாளர்களும் கதர் ஆடைகளை அளித்து அதனை அணிந்து வரவும் செய்தார்.

மேலும், நெசவுத் தொழிலாளர்கள் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்ய இனி முடிந்த அளவிற்கு கதர் ஆடைகளை பயன்படுத்த போவதாக கமல் தெரிவித்து இருந்தார்.

kamal - updatenews360

இந்தநிலையில், இந்த சீசனில் தான் கமலின் ஆடைகளை அடிக்கடி கேலிக்கு உள்ளாகி இருந்தது. அதிலும் குறிப்பாக இறுதி போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது.

அந்த ஆடையில் வெள்ளை பெயிண்ட் ஊற்றியது போல இருந்ததால் நெட்டிசன்கள் பலரும் கமலின் இந்த ஆடையை சமூக வலைதளத்தில் கேலி செய்து வந்தனர்.

kamal - updatenews360

இப்படி ஒரு நிலையில் கமலின் இந்த ஆடையை வடிவமைத்த அமிர்தா, இந்த குறிப்பிட்ட ஆடை குறித்து பேசி இருக்கிறார். அதில் ‘இறுதிப்போட்டி என்பதால், கமல் சார் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் திட்டமிட்டோம் என்றும், இந்தமுறை ‘நான் டெனிம் போடுறேன் என்று அவர் கூறியதாகவும், ஜாக்கெட் மாதிரியான ஆடை வேண்டும்’ என்றதாகவும், அதனால் தான், கதர் டெனிமிலேயே ஜாக்கெட்டை வடிவமைத்தேன்’ எம்பிராய்டரி உட்பட அனைத்தையும் கையால் தான் வடிவமைத்தேன் என்றும், ஆடையை வடிவமைத்த பின்னர் கலை இயக்குனர் ஜாக்சனிடம் ஆடையில் பெயிண்ட் செய்ய கொடுத்தேன் என தெரிவித்தார்.

kamal - updatenews360

மேலும் இதுகுறித்து கலை இயக்குனர் ஜாக்சன் வடசென்னை அசுரன் போன்ற படத்திற்கு எல்லாம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் என்றும், வட சென்னை படத்தில் நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது ஜாக்சன் எனக்கு நண்பரானார் என்றும், நான் பெயிண்ட் செய்ய கொடுத்ததும் இரண்டே நாட்களில் ஆடைக்கு பெயிண்ட் செய்து கொடுத்துவிட்டார் என தெரிவித்தார்.

kamal - updatenews360

மேலும், அவர் இந்த ஆடையை பார்த்ததும் கமல் சாரே ‘குட் ஜாப் என்று பாராட்டினார்’ அதுவே எங்களுக்கு போதும் என்றும், சமூக வலைதளத்தில் இந்த ஆடையை பலரும் கேலி செய்வதை பற்றி கவலைப்பட எனக்கு நேரம் கிடையாது எனவும், இது எல்லாமே ஒரு கலை தான், அதை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும், இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம், மிகவும் கடினம் பெயிண்டை ஆடை மீது ஊட்ரினால் அது எல்லா இடத்திலும் பட்டுவிடும் அதை எப்படி செய்கிறோம் என்பது தான் கலை’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 433

    2

    1