நீ யாரா வேணாலும் இரு.. ரஜினி மற்றும் கமல் : பல ஆண்டு பிரச்சனை குறித்து பேசிய தயாரிப்பாளர் ராஜன்..! (வீடியோ)
Author: Vignesh23 December 2022, 3:00 pm
70, 80களில் தமிழ் சினிமாவில் ஆரம்பித்து இருதுருவ நட்சத்திரங்களாத தற்போது வரை திகழ்ந்து வருபவர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான ஒரு ஸ்டைலில் நடித்து வருகிறார், உலகநாயகன் கமல் ஹாசன் அனைத்து ரோலிலும் சகஜமாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தற்போது வரை நண்பர்களாக இருந்து தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தி வருகிறார்கள்.
இப்படி ஒரு சூழலில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சில செயல்களால் இருவரும் சில சர்ச்சையிலும் சிக்கி சிலரின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அப்படி பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் பல மேடைகளில் ரஜினிகாந்தை புகழ்ந்தும் கமல் ஹாசனை இகழ்ந்து பேசியும் வருவது சமூக வலைதளத்தில் தற்போது பேசுபொருளாக இருந்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன் நடிகர் கமல் ஹாசன் பர்மா பஜாரில் திருட்டு விசிடி தயாரிப்போரை எதிர்த்து போராட்டம் செய்ய கே ராஜனையும் அழைத்திருந்த நிலையில், அப்போது அங்கு பெரிய கைக்களப்பு ஏற்பட அங்கிருந்து கமல் ஹாசன் எஸ்கேப் ஆகியதாக தெரியவருகிறது.
ஆனால் கே ராஜன் சம்பவ இடத்தில் மாட்டிக்கொண்டு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது கமல் ஹாசன் சொன்னதால் தான் நான் அங்கு சென்றேன் என்றும் அதன்பின் தன்னை கமல் ஹாசன் யாருன்னு கேட்டதாக கூறி தன்னை நம்ப வைத்து கமல் ஹாசன் ஏமாற்றிவிட்டதாகவும் சமீபத்திய பேட்டியொன்றில் கே ராஜன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ரஜினிகாந்தின் செக்ரட்டரி ஆறுமுகம் தனக்கு போன் செய்து தலைவர் பேச வேண்டும் என்று தெரிவித்து, உடனே தான் பேசியபோது, போராடியதற்காக தன்னை பாராட்டி நான் உங்களுடன் இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்ததாக கே ராஜன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவத்தில் இருந்து ரஜினியை போற்றிக்கொண்டு வருகிறேன் என்று கே ராஜன் தெரிவித்துள்ளார்.
அட எச்ச பயலே @ikamalhaasan 🤧#Jailer | #Rajinikanth | @rajinikanth pic.twitter.com/4ADMXYFN8J
— 𝐏𝐫𝐚𝐛𝐚 𝐂𝐡𝐚𝐩𝐥𝐢𝐧ᴶᵃⁱˡᵉʳ (@Chapiln_Here) December 22, 2022