உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.
இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, முன்னதாக விக்னேஷ் சிவன் ராஜ்கமல் புரடக்ஷனில் பிரதீப் ரெங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில், கமலுக்கு ஜோடியாக நயன் கண்டிப்பாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் தான் நயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கமலை வைத்து எடுக்கப்போகும் படத்தின் கதையை மணிரத்னம் முன்னதாகவே எழுதி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க கமலுக்கு ஜோடியாக யார் தான் நடிக்க போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்து வந்த நிலையில், மணிரத்னம் இயக்க போகும் அந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.
முன்னதாக, வித்யாபாலன் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் தமிழில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து KH234 படத்தில் தான் கமலுக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளதாக இந்த தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.