தமிழ் சினிமாவிற்கே “THUG LIFE” கமல் செய்ய போகும் அதிரடி சம்பவம் …!

Author: Selvan
7 November 2024, 6:12 pm

கொஞ்சம் இருங்க பாய்…!கம்பேக் கொடுக்கும் கமல்…

உலக நாயகனின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் டீசர் வெளியானது.

இத்திரைப்படத்தில் நடிகர் கமலுடன் சிம்பு,த்ரிஷா,அபிராமி என மிகப்பெரிய சினிமா பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

நாயகன் திரைப்படத்திற்கு பின்னால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் கூட சேர்ந்து பணிபுரிகிறார் நடிகர் கமல்.


சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்திருக்கும் கமலை சிறப்பிக்கும் விதமாகவும் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாகவும் அவருடைய 70வது பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி படம் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


இப்படத்தில் நடிகர் சிம்புவும் திரிஷாவும் ஒரு காதல் பாட்டிற்கு நடனம் ஆட உள்ளனர். விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் சொதப்பிய நிலையில், தக் லைஃப் படம் ஆண்டவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கன்ஃபார்மாக தெரிகிறது.

இதையும் படியுங்க: தேவயானியை காரி துப்பிய சரத்குமார்…படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 123

    0

    0