தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.
இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.
தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.
ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும், இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில், நடிகை சுருதிஹாசன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அதன் தொகுப்பாளர் இவரிடம் சில கேள்விகள் கேட்டார்.
ஒரு பேட்டியில், உங்கள் தந்தை சொல்லிய எதை நீங்கள் கேட்காமல் போனீர்கள் அல்லது அவர் சொல்வதை எதிர்த்துப் பேசுவீர்களா? எனக் கேட்கப்பட்டதற்கு, பதில் அளித்த ஸ்ருதி, எல்லா குழந்தைங்க மாதிரி தான் நானும், சிறுபிள்ளையாக இருக்கும்போது தன் அப்பா மழையில் நனையாதே, கரண்ட் ப்ளக்கில் கையை வைக்காதே என சொல்வார் என்றும், ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட கேட்காமல் ஏன் அப்படி செய்யக்கூடாது.
அப்படி செய்தால் என்ன ஆகும் என திரும்பி திரும்பி கேள்வி கேட்பேன். என் அப்பா சொல்லிய எதையும் நான் கேட்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட பலரும் நம்ம ஸ்ருதியா இது என ஆச்சரியப்பட்டும், நீங்க சின்ன பிள்ளைல இவ்வளவு சுட்டித்தனமா இருப்பீங்களா? என மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.