சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே புகழ் வெளிச்சத்தில் மின்னி கொண்டு இருக்கிறார். இவர் ஆன்மீக ரீதியாக நல்லது மட்டுமே செய்வார் என்றும், அப்படி ரஜினி தன்னை நம்பி வருபவர்களுக்காக ஏராளமான உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் ஏதாவது ஒரு விஷயம் கேள்விப்பட்டால் முதல் ஆளாக ஓடி வந்து நிற்பார் என்பது ஊர் அறிந்த ஒன்று. இதனாலேயே ரஜினிகாந்த்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் உலக நாயகன் கமல் இதுபோன்று இருப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து கொண்டு வருகிறது. மேலும் கமல் யாருக்கும் ஒரு ரூபாய் கூட உதவி செய்ய மாட்டார் என்றும், கஷ்டப்படுபவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற மாட்டார் என்பது போன்ற கடும் விமர்சனங்கள் உலக நாயகன் மேல் இருக்கிறது.
இதனிடையே, சமீபத்தில் கூட நடிகர் மயில்சாமியின் இறப்புக்கு ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய போது கமல் மட்டும் வரவில்லை என்று பலர் கிசுகிசுக்கத்தான் செய்தார்கள்.
ஆனால் உண்மையில் பிறருக்கு செய்யும் உதவிகளை உலக நாயகன் கமல் யாரிடமும் வெளி காட்டிக் கொண்டது கிடையாது என்பதே நிதர்சணமான உண்மை. சினிமா மட்டுமல்ல அந்தத் துறையில் இல்லாதவர்களுக்கும் கூட கமல் நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். ஆனால் இது எதுவும் மீடியாவில் கடுகு அளவு கூட கசியாமல் பார்த்து கொள்வது அவருடைய பெருந்தன்மை என்று சொல்லலாம்.
ஏனென்றால் இது போன்ற விளம்பரங்களை கமல் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் ரஜினி விஷயத்தில் அப்படி கிடையாது. ரஜினி எங்கு சென்றாலும் அது ஒரு பப்ளிசிட்டியாக மாறிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் பிஆர்ஓ மூலம் மீடியாவில் விளம்பரப்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும். அப்படித்தான் நடிகர் பொன்னம்பலத்தின் கிட்னி பிரச்சினையும், அவர் பாதிக்கப்பட்டிருந்தபோது கமல் முதல் ஆளாக ஓடி வந்து உதவி செய்தார்.
அதே போன்று ரஜினியும் அவருக்கான மருத்துவ உதவியை செய்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் பொன்னம்பலம் உடல்நலம் தேறி வரும் வரையில் அவருக்கான செலவு மற்றும் குடும்ப செலவு அனைத்தையும், கமல் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் பொன்னம்பலத்தின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவை கூட கமல் ஏற்றுக் கொண்டாராம். இந்த விஷயம் பலருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.
இதே போன்று பலருக்கும் கமல் ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார். இருப்பினும் அதை அவர் விளம்பரப்படுத்தியது கிடையாது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படு வருகிறது. இப்படி நல்லது செய்தும் அவருக்கு கெட்ட பெயர் மட்டுமே கிடைக்கிறது. இதை பார்க்கும் போது ரஜினி போல் கமல் பிழைக்க தெரியாத மனிதராக இருக்கிறாரே என்ற எண்ணம் தான் அனைவருக்கும் தோன்றுகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.