கமல்ஹாசன் இந்தி படங்களில் நடிப்பதை நிறுத்த அந்த நடிகை தான் காரணம்; பல வருடங்களுக்கு பிறகு வெளியான உண்மை..!

Author: Vignesh
22 December 2022, 11:15 am

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் வெகு காலமாக நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் இன்றும் திரைப்படங்களில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.

ஆனால் கமல்ஹாசனின் ஹிந்தி சினிமா பிரவேசம் மாட்டும் 1981ஆம் ஆண்டு தொடங்கி 1985ஆம் ஆண்டிலேயே முடிவடைந்தது விட்டது. அதற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி திரைப்படத்திம் ஹிந்தி ரீமேக்காண சாட்சி 420 என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

avvai shanmugi - updatenews360

தன்னுடைய தனித்தன்மையான நடிப்பினால் கமல்ஹாசன் சிறு வயதில் நடிக்க ஆரம்பித்து இன்று வரை தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் 1978ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் கன்னடத்தில் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் நடித்திருந்த மரோ சரித்திரா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மரோ சரித்திரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் இந்த படம் ரீ மேக் செய்யப்பட்டது.

kamal haasan -updatenews360

ஆனால் ஹிந்தி சினிமாவில் ரீமேக் செய்யப்பட்ட மரோ சரித்திரா படம் ஏக் துஜே கே லியே என்ற பெயரில் சில மாற்றங்களுடன் வெளியானது. மேலும் இப்படத்தில் இயக்குனர் பாலசந்தர் நடிகை சரிதாவுக்கு பதிலாக ஹிந்தி நடிகை ரதி அக்னிகோத்ரியை நடிக்க வைத்தார். இப்படமும் பெரிய அளவில் ஹிந்தியில் ஹிட் அடிக்கவே அடுத்த படத்தில் சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனம் கமல்ஹாசன் மற்றும் ரதி அக்கினிகோத்திரி ஜோடியாக “தேக்கா பியார் தும்கார” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டது.

kamal haasan- updatenews360

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்திருந்த நடிகை ரதி அக்னிகோத்ரி இயக்குனர் பாலசந்தர் ஏக் துஜே கே லியே படத்தில் தனக்கு குறைவான காட்சிகள் மட்டுமே கொடுத்தார் என கூறியிருந்தார். மேலும் நடிகை ரதி அக்னிகோத்ரியின் தந்தையும் பாலசந்தர் மீது குற்றம் சாட்டினார்.

இப்படியிருக்குபோது பாலசந்தர் கமல்ஹாசனுக்கு குரு என்பதினால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமல் பின்னர் அந்த வாக்குவாதம் சண்டையில் முடிந்தது. இதற்கு பிறகு “தேக்கா பியார் தும்கார” திரைப்படம் பாதியில் நின்று போகவே உலகநாயகன் மற்ற படங்களில் நடித்தார்.

kamal haasan - updatenews360

இப்படி சில காலங்கள் போகவே தயாரிப்பு நிறுவனத்தில் செய்த ஒப்பந்தம் காரணமாக மீண்டும் கமலும் நடிகை ரதியும் நடிக்க வேண்டியதாகியது.

1985ஆம் ஆண்டு “தேக்கா பியார் தும்கார” படம் கடைசியில் திரையில் வெளியாகியது. இதற்கு பிறகு நடிகை ரதி அக்னிகோத்ரி அளித்திருந்த பேட்டி ஒன்றில் தான் இயக்குனர் பாலசந்தர் பற்றி தான் தவறாக எதுவும் பேசவில்லை, கமல்ஹாசன் தான் இடையில் தன்னிடம் சண்டை போட்டார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கமல்ஹாசன் ஹிந்தி படங்களில் நடிக்க வேண்டாம் என்று தன்னுடைய முடிவில் உறுதியான இருந்ததாக கூறப்படுகிறது.

K-balachander_updatenews360

இந்த நிலையில் 1985ஆன் ஆண்டு வெளியான இப்படத்திக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் வேறு ஹிந்தி படங்களில் நடிக்கவில்லையாம். அதற்கு “தேக்கா பியார் தும்கார” படப்பிடிப்பில் நடந்த இந்த நிகழ்வு ஒரு முக்கியமான காரணமாம். அதற்கு பிறகு 13 வருடங்கள் கழித்து கமல் மற்றும் நடிகை மீனா நடித்திருந்த அவ்வை சம்முகி படத்தின் ஹிந்தி ரீ மேக்கான சாட்சி 420 படத்தில் தான் கடைசியாக கமல்ஹாசன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 853

    0

    0