ரஜினியை திட்டினாரா கமல்; ரசிகர்கள் கண்டனத்திற்கு கமல் சொன்ன பதில்

Author: Sudha
3 July 2024, 7:35 pm

கமல்,எஸ் ஜே சூர்யா, சித்தார்த், தீபிகா படுகோனே என முன்னணி நடிகர்கள் நடித்து ஷங்கரின் இயக்கத்தில் ஜூலை 12 திரைக்கு வர இருக்கும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் கவனம் ஈர்த்திருக்கிறது.எல்லோரும் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில்தான் பேசுகிறார்கள். களத்தில் ஒரு துரும்பைகூட கிள்ளிபோட வரவில்லை” என்ற வசனம் தான் அது. இது ரஜினிகாந்த் அவர்களை குறிப்பிட்டு வைக்கப்பட்ட வசனம் என்று ரஜினி ரசிகர்கள் சொல்லி கொண்டு அதற்கு கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த கமல் எனக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பு புதிய கூட்டணி அல்ல. நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிறைய படங்களில் நடித்து இருக்கிறோம். மற்ற போட்டியாளர்கள் போல் நாங்கள் அல்ல. எங்கள் இருவருக்குமே ஒருவர்தான் குரு,அவர் பாலச்சந்தர். போட்டி இருக்கும் ஆனால் எங்களுக்குள் பொறாமை கிடையாது.

எங்கள் இருவருடைய பாதைகளும் வெவ்வேறாக இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொண்டது கிடையாது. இது நாங்கள் இருவரும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தம் ” என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 181

    0

    0