தாத்தா வந்தாரு… தியேட்டரையே ஓடவிட்டாரு : இதுல PART 3 வேற.. இந்தியன் 2 திரை விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan13 July 2024, 5:45 pm
இந்தியன் 2 வெளியாகி தாத்தா எப்படி எல்லாம் படம் பாத்தவங்கள கதறவிட்டறுன்னு, பதறவிட்டருனு இந்த வறுவல்ல (Roast) மன்னிச்சு, இந்த ரிவ்யூல பாக்கலாம்.
கதைகளம் : சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் & friends எல்லாம் சேந்து சமுதாயத்துல நடக்குற பிரச்சனைகள social mediaல கலாச்சு Awareness வீடியோ போட்டு இருக்கப்போ இத விட பெரிய பிரச்சினைகள சமாளிக்க இந்தியன் தாத்தா வரனும்ன்னு #comebackIndianன்னு ஒரு hashtag அ trend பண்ணி அவர வர வைக்கிறாங்க அதுக்கப்புறம் என்ன நடந்தது தாத்தா வந்து ஊழல், லஞ்சத்த ஒழிச்சாரா இல்ல அத சொல்லி… சொல்லி…. நமக்கு தலைவலிய வர வச்சாராகிறதுதான் இந்தியன் 2 படத்தோட மீதி கத.
சிறப்பு:
கமல்ஹாசன்க்கு முதல் பாகத்த விட இதுல கொஞ்சம் screen space கம்மியா இருந்தாளும் தன்னால முடிஞ்ச அளவுக்கு படத்த தாங்க ட்ரை பண்ணிருக்காரு.
படத்துக்கு AR ரகுமானோட மியூசிக் பெரிய பலமா இருந்துச்சு. ஐயோ Sorry இந்த படத்துக்கு மியூசிக் அனிருத்ல! இப்படி அனிருதயே மறக்கடிக்குற அளவுக்கு AR ரகுமானோட பழைய இந்தியன் படத்தோட மியூசிக் எல்லாம் அங்க அங்க இருந்தது கொஞ்சம் ரசிக்கும் படியா அமைஞ்சது.
படத்த முடிஞ்சா அளவுக்கு லார்ஜ் ஸ்கேல்ல எடுத்து காட்ட ரவி வர்மனோட ஒளிப்பதிவு மிகபெரிய உறுதுணையா இருந்துச்சு. தாத்தா வரதுக்கு முன்னாடி நடக்குற சம்பவங்கள் எல்லா பழைய ஷங்கர் படங்கள்ள வர மாதிரியான அழுத்தமான காட்சிகளா அமைக்க ட்ரை பண்ணது கதைகளத்த செட் பண்ண கொஞ்சம்… கொஞ்சம்… முயச்சி பண்ணிச்சு.
மொத்த படத்துலயும் 3 Partக்கு கடைசில காட்டபடுற அந்த 2 நிமிஷ PRE INDIPENDENCE காட்சிகள் அடுத்த பாகத்துக்கு கொஞ்சம் எதிர்பார்ப்ப கிளப்புது. மொத்த படத்துலயும் அந்த 2 நிமிஷம் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. சேனாபதி அப்பா வீரசேகரன் கமல். ஜோடியா வர காஜல்ன்னு அடுத்த பாகத்த சரியா பண்ணா பாக்குறவங்களுக்கு கொஞ்சம் நிறைவ கொடுக்கும்.
தொய்வு:
படத்துல கமல் மேக்அப் மிகபெரிய சொதப்பல்! இந்தியன் முதல் பாகத்துல போடப்பட்ட ப்ரஸ்தடிக் மேக்அப் அப்பவே பெரிய பேசு பொருளா இருந்துச்சு அவ்வைசண்முகி படங்கள்ல அது ரசிக்கு படியா இருந்துச்சு ஆனா இதுல தாத்தாவுக்கு அந்த மேக்அப் பெருசா ஒட்டவே இல்ல தூரத்துல பாத்தா அவரு தாத்தா தான்னு சொல்ல முடியாத அளவுக்கு கொஞ்சம் இல்ல கொஞ்சம் நிறையவே சொதப்பல் நடந்திருக்கு.
படத்துல வர மத்த கதாபாத்திரங்கள் ஏதோ தேமேன்னு வந்துட்டு போற மாதிரிதான் இருக்கு. சமுத்திரகனி, பிரியா பவானி ஷங்கர், ரகுல் பரீத் சிங், தம்பி ராமையா, பாபி சிம்ஹா, SJ சூர்யா மாதிரியான நடிகர்களுக்கு பெரிய space இல்ல, விவேக் அவர்களோட கதாபாத்திரமும் அந்நியன் படத்தோட ச்சாரி characterர ஞாபக படுத்துது. அதுலயும் பிரியா பவானி ஷங்கர் தாத்தா songல டான்ஸ்க்கு ரொம்ப திணறுறாங்க! இதுல சோகம் என்னன்னா தாத்தாவே அப்பப்போ சிறப்பு தோற்றம்ன்னு சொல்லுற அளவுக்கு சில காட்சிகள்ள வந்துட்டு போறாரு.
ரசிச்சு.. ரசிச்சு.. பாத்த வர்மாகலைய இந்த படத்துல இருந்து வெறுத்து போற அளவுக்கு சம்பவம் பண்ணி வச்சிருக்காங்க முதல் பாகத்துல ஒரு சம்பவத்த காட்டி அந்த கொலைக்கு இதுதான் காரணம்ன்னு செட் பண்ணுவாங்க ஆனா, இந்த படத்துல கொலை பண்ற இடத்துல இருந்து தாத்தாவே காரணத்த சொல்லிட்டு கொல பண்றதும் அந்த வர்ம அடிய விவரிக்கிறதும் ரொம்ப பொறுமைய சோதிக்குது.
படத்தோட அடுத்த பெரிய எதிரியே நீளம் தான். 3 மணிநேரம் படம் கொஞ்சம் இல்ல ரொம்பவே பொறுமைய சோதிக்குது எடிட்டர் கிட்ட நாமே கத்திரிய வாங்கி வெட்டி எறியலாம்கிற அளவுக்கு சோதனை களம் ஸ்டார்ட் ஆகுது.
அனிருத் இந்த படத்துக்கு சரியா பிட் ஆகல. பாரா பாட்டு ரசிக்கும் படியா இருந்தாலும், அந்த காலண்டர் கண்ணுக்கு குளிச்சியா இருக்க ஒரு தேவை இல்லாத ஆணி. BGM வர இடங்கள்ள பழைய இந்தியன் படத்தோட மியூசிக் மிகபெரிய ஆளுமைய நிகழ்த்துரனால அனிருத் மறக்கடிக்கபடுறாரு அடுத்த பாகத்துல அத சரி பண்ணுவாருன்னு நம்பலாம்.
கடந்த ரெண்டு படங்கள்ள நடந்த அதே தவறுதான் இந்த படதுலயும்! திரைகதை சரியா அமைக்க படல சுஜாதா இறந்ததுக்கு அப்புறம் ஷங்கர் சார் கொஞ்சம் திணற ஆரம்பிச்சுடார்ன்னு ரசிகர்கள் சொல்லுற அளவுக்கு சொதப்பல்கள் நிறைய நடந்திருக்கு, வசனங்களும் பல இடங்கள்ள “எவன் எழுதி குடுத்தான்னு இவன் இப்படி பேசிட்டு போறான்கிற” அளவுக்கு தான் வசனங்கள் இருந்துச்ச்சு எழுத்தாளர் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார்ன்னு 3 பேர் இருந்தும் காப்பாத்த முடியல. இப்போ படம் பாத்த எல்லாரும் சொல்லுறது MISS YOU சுஜாதா.
படத்தோட ENDINGக்கு சரியான FINISHING கொடுத்து முடிச்ச மாதிரி தெரியல ஏதோ பாதில CUT பண்ணி விட்ட மாதிரி இருந்துச்ச்சு என்னதான் மீதிய அடுத்த Partல பாக்கலாம்னாளும் அவசரமா முடிச்ச மாதிரியா முடிக்கிறது.
முடிவு:
ஓகேக்கு கீழ இருக்க முதல் பாதியும், அந்த ஓகேக்கு கீழன்னு கூட சொல்ல முடியாத இரண்டாம் பாதியும் இந்தியன் இரண்டாம் பாகத்த முடிச்சு விட்டிருச்சுன்னு சொல்லலாம் அடுத்த பாகத்துலயாவது அத சரி செய்வாங்களான்னு எதிர் பாக்கலாம்.
REVIEWED BY VIGNESH KRISHNAN