கமல் விரித்த வலையில் ஸ்ரீதேவியின் மகள்.. – சைலண்டாக காய் நகர்த்திய விக்னேஷ் சிவன்..!
Author: Vignesh6 July 2023, 5:30 pm
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி திரைப்படமான விக்ரம் சூப்பர் ஹிட் கொடுத்து வசூலில் சாதனை படைத்தது.
இதனிடையே, கமலஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கமலஹாசன் அடுத்து நடிக்க இருக்கும் தனது KH 233 படத்தை பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் H. வினோத் இயக்க உள்ளதாகவும், மேலும், இந்த படத்தில் திரைக்கதை தயாரிக்கும் பணியை கமல் அலுவலகத்தில் தொடங்கியுள்ளார் என்றும், இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வேண்டும் என இயக்குனர் வினோத்திடம் கமல் கூறியுள்ளாராம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது என தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவருமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதனிடையே, கமலஹாசன் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது லவ் டுடே படத்திற்கு பின்னர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன் நடிக்க உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது நயன்தாராவை விட்டுவிட்டு வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஸ்ரீதேவியின் மகளும் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் பட குழு.
ஏற்கனவே, தென்னிந்திய சினிமாவில் ஜூனியர் என்டிஆர் படத்தில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் நடித்த வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசனும் விக்னேஸ்சிவனும் சைலன்டாக இந்த வேலையை நகர்த்தி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.