தாய், தந்தையுடன் சுட்டி சிறுவனாக கமல் ஹாசன்… அரிய குடும்ப புகைப்படம் இதோ!
Author: Rajesh25 January 2024, 7:09 pm
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வரும் கமல் ஹாசன் இன்று உலக நாயகனாக பெயரெடுத்துள்ளார். 69 வயசிலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக டாப் இடத்திலே இருந்து வருகிறார். திரைப்படம், அரசியல், தொகுப்பாளர் என துறைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கமல் ஹாசன் சிறு வயதில் தனது தாய், தந்தை, அக்கா என குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அறிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுட்டி பையனாக சிறுவயதில் கமல் ஹாசன் கியூட்டாக இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.