நள்ளிரவு வரை குடி.. கும்மாளம்..! பிரபல நடிகை மீது கை போட்டுகொண்டு அந்த பாடலை ரசித்த கமல்ஹாசன்..! வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
16 November 2022, 10:30 am

தமிழ் சினிமா ரசிகர்களால், உலக நாயகன் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவருடைய 68 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் விதமாக பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில், பல முக்கிய பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Kamal Radhika - Updatenews360

மதுவுடன் களைகட்டிய இந்த பார்ட்டியில். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக… இயக்குனர் மிஷ்கின், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்பாண்டி சீமையிலே’.. என துவங்கும் பாடலை கமல் முன் பாடியுள்ளார். இந்த பாடலை தன்னுடைய தோழி ராதிகா மீது கை போட்டபடி கமல்ஹாசன் ரசித்தார்.

kamal-haasan-birthday-party - updatenews360

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பாடி முடித்த பின்னர், கமல் மிஷ்கினை அணைத்தபடி தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலின் இந்த வீடியோ சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவர் என்கிற முறையில் கமல் இப்படி நடந்து கொள்ளலாமா? என சிலர் கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்க முடிகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 484

    0

    0