இப்போ ரூ. 130 கோடி சம்பளம் வாங்கும் கமல் ஹாசனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Author: Shree23 August 2023, 6:36 pm
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் படத்திற்கு படம் தனது திறமைகளை நிரூபித்து காட்டி நடிப்பு ஜாம்பவானாக ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை தக்கவைத்துக்கொண்டார். இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து தரப்பு மக்களையும் தன் நடிப்பின் மூலம் மகிழ்வித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய கமல் ஹாசன் 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து நடித்து வந்த அவர் இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் , தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத்திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.
தற்போது 68 வயதாகும் கமல் ஹாசன் இளம் ஹீரோவை போன்று கேங்ஸ்டர் படங்களின் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது கல்கி 2898 AD மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கும் கமல் ஹாசன் அவரது முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்கு வெறும் 500 ரூபாய் சம்பளமாக வாங்கினாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்கள் எல்லோரையும் வியக்க செய்துள்ளது.