நாகேஷ் மட்டும் என் கையில கிடைச்சான் கொல பண்ணிடுவேன்… கொந்தளித்த கமல்!
Author: Shree14 June 2023, 9:48 pm
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
தற்போது 68 வயதாகும் கமல் கொஞ்சம் கூட சோர்வோ… உடல் தளர்ச்சியோ இல்லாமல் பார்த்த கண்ணனுக்கு அப்படியே இன்னும் இளம் ஹீரோவை போன்று ஆக்ஷன் காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே பல்வேறு இளம் கலைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களது படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், ” கமல் அவரது குருநாதர் பாலசந்தர் சாரிடம் நடித்துக்கொண்டிருந்தபோது ” எருமை எரும என்ன இதனை டேக் போற… இதுவே இந்த இடத்தில் என் நாகேஷா இருந்திருந்தால் ஒரு நொடியில் நடித்து முடித்திருப்பார். என சொல்லி திட்டுவராம். அப்போது கமல் செம கோபப்பட்டு நாகேஷ் மட்டும் என் கையில கிடைச்சான் தலைகாணி வச்சி மூஞ்சிலே அழுத்திடுவேன் என எரிச்சல் ஆனாராம். பின்னர் நாகேஷ் உடன் சேர்ந்து நடித்தபோது பாலசந்தர் சொன்னது உண்மைதான் என நினைத்து அவரை கையெடுத்து கும்பிட்டாராம் கமல்.