16 வயது பெண்ணுக்கு லிப் லாக் கொடுத்த நீங்க பேச தகுதியே இல்ல – கமல் ஹாசனை விளாசிய மனைவி!

Author: Shree
6 November 2023, 2:13 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இது குறித்து தனது கருத்தினை ஆதங்கத்தோடு தெரிவித்துள்ள யுகேந்திரனின் மனைவி, பெண்களின் பாதுகாப்பிற்காக பிரதீப் வெளியேற்றப்பட்டதாக கமல் ஹாசன் கூறுவதற்கு தகுதியே இல்லை. 16 வயது பெண்ணாக இருந்த ரேகாவை அவரது அனுமதியே இல்லாமல் லிப் லாக் கொடுத்தது மட்டும் அல்லாமல் பல பெண்களிடம் மிகவும் ஆபாசமாக ரொமான்ஸ் செய்துள்ளார். எனவே பிரதீபால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கமல் ஹாசன் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என யுகேந்திரனின் மனைவி தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 319

    0

    0